ராணுவ வீரர் என கூறி கோவை தொழிலதிபரிடம் ரூ.8 லட்சம் நூதன மோசடி.!!

கோவை பீளமேடு புதூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் சர்மா ( வயது 76 ) இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது .அதில் பேசிய நபர் தனது பெயர் சகில் குமார் எனவும் கோவை ரெட் பீல்ட் ராணுவம் கேண்டினில் ராணுவ வீரராக பணியாற்றி வருவதாகவும், முகாமுக்கு 200 கிலோ எடையில் போட் நட்டுகள் தேவைப்படுகிறது. அதனை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இராணுவ வங்கியில் இருந்து பணம் அனுப்ப வேண்டியது உள்ளது. எனவே உங்கள் வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி சுரேந்திர சர்மாவிடமிருந்து வங்கி விவரங்களை கேட்டுக் கொண்ட அவர் அந்த வங்கிக் கணக்கிலிருந்து நான் கூறும் வங்கி கணக்கிற்கு 1 ரூபாயை முதலில் அனுப்புமாறு கூறியுள்ளார் . இதனை நம்பிய சுரேந்தர் சர்மா முதலில் ஒரு ரூபாய் அனுப்பினார். ஆனால் சில நிமிடத்தில் சுரேந்தர் சர்மாவின் வங்கி கணக்கிலிருந்து ரூ. 8 லட்சம் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டது அறிந்த சுரேந்தர் சர்மா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..