கடன் வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி – குற்றவாளி கசாலி கைது..!

பூந்தமல்லி: உங்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் வேண்டுமா ஒரு மணி நேரத்தில் சுலபமாக நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று பலவிதமான ஆசை வார்த்தைகளை கூறி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் மக்கள் குறை கேட்கும் முகாமில் பூந்தமல்லியை சேர்ந்த முகமது இஸ்மாயில் கொடுத்த புகார் மனு இஸ்மாயில் அப்துல் ரஜித் மகன் கசாலி(64) என்பவன் தாங்கள் வருமான வரி கட்டுவதால் தங்களுக்கு வங்கி கடன் சுலபமாக கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி முகமது இஸ்மாயிலை ஏமாற்றியுள்ளான். அவரும் தனது தாயார் அமீருன்னிசா பெயரில் உள்ள சொத்துக்களை குற்றவாளி கசாலியும் ஏமாந்த முகமது இஸ்மாயிலும் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் பெற்று ஆளுக்கு 60 லட்சம் என ஒப்பந்தம் செய்து அக்ரீமெண்ட் போட்டுள்ளார்கள் .ஆனால் ஒப்பந்தப்படி ரூபாய் 70 லட்சத்தை ஏமாற்றி உள்ளார் . இது குறித்து முகமது இஸ்மாயில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பிராடு கசாலியை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..