அடேங்கப்பா!! 600 சவரன் தங்க நகைகள்.. 2 சொகுசு கார்கள்.. 20 கிலோ வெள்ளி… கொடுத்தும் ஆசை அடங்கவில்லை – முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது மருமகள் பரபரப்பு புகார்.!!

600 சவரன் ன் தங்க நகைகள் 2 சொகுசு கார்கள் 20 கிலோ வெள்ளி பாத்திரங்கள் கொடுத்தும் ஆசை அடங்கவில்லை – முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி கந்தன் மீது போலீசில் புகார்…

ஆவடி: பெண் குழந்தை பிறந்தும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலீசில் புகார் அளித்துள்ளார்

சென்னையை அடுத்த அம்பத்தூர் பானு நகர் புது நகரை சேர்ந்தவர் ஸ்ரீ காந்த் இவரது மகள் சுருதி ஆகியோர் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து தான் மரக்கடை மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறேன் எனது மகள் சுருதி தி பிரியதர்ஷினி புகழ்பெற்ற மருத்துவராக பணியாற்றி வருகிறார் எனது மகள் சுருதிக்கும் சோழிங்கநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ தற்போதைய சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் அ இ அதிமுக புறநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் கே பி கந்தன் கே பி கே சதீஷ்குமார் இவர் சென்னை மாநகராட்சி அதிமுக 182 வது மாமன்ற உறுப்பினராக உள்ளார் இந்த நிலையில் 2018 ம் ஆண்டு பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது  . அப்போது கேபிகே சதீஷ்குமாருக்கு ரொனால்டோ ரேடோ வாட்ச் வைர மோதிரம் தங்கத்தினால் சங்கிலி போட வேண்டும் என்று கேட்டனர். மேலும் எனது மகளின் திருமணத்திற்கு 1000 சவரன் தங்க நகைகளும் மாப்பிள்ளைக்கு 100 சவரன் தங்க நகைகளும் விலை உயர்ந்த இரண்டு ஆடம்பர கார்களும் திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று திருவான்மியூரில் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் வைத்தாக வேண்டும் என்ற கெடுபிடியான நிபந்தனைகளை விதித்தனர் . திருமணமும் கடந்த 25.4.2018ம் ஆண்டு நடந்தது . வரதட்சணையாக 600 சவரன் தங்க நகைகள் வெள்ளி நகைகள் 20 கிலோ அடேங்கப்பா விலை உயர்ந்த 2 சொகுசு கார்கள் கொடுத்தோம். இரண்டு வருடம் எனது மாப்பிள்ளை எனது அன்பு மகளும் மிகவும் சந்தோஷமாக குடும்பம் நடத்தினர் . 2019ம் ஆண்டு பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் ஆத்திரமடைந்த எக்ஸ். எம்.எல். ஏ. கே பி கந்தன் குடும்பத்தினர் என் மகள் சுருதி யை வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்துள்ளனர் . இதையெல்லாம் கேட்டுக் கொண்டு எனது மகள் சுருதி அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வந்துள்ளார். மாமனார் கே பி கந்தன் மாமியார் கே பிகே சந்திரா நாத்தனார் கே பி கே இந்துமதி மற்றும் கணவர் கே பிகே சதீஷ்குமார் ஆகியோர் சேர்ந்து கொண்டு மகளை அடித்து சித்தரவதை செய்து வீட்டை விட்டு துரத்தி விட்டனர் இந்த பிரச்சனை குறித்து தீர்வு கான பலமுறை கேபி கந்தனிடம் பேசினோம். அவரும் கூடுதல் வரதட்சனை கொடுத்தால் தான் உங்கள் மகள் எனது வீட்டில் வாழ முடியும் என்று கெடுபிடியாக சொல்லி விட்டார். எங்களுக்கு வேறு வழி தெரியாமல் ஆவடி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தோம் . இதுகுறித்து அம்பத்தூர் போலீசாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்..