நடிகர்கள் கமல்ஹாசன்,சிவகார்த்திகேயன் உருவ பொம்மை எரிக்க முயற்சி – தடுத்த போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல்.!!

கோவை: நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் ‘அமரன் ” சினிமா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் இஸ்லாமிய சமூகத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் நேற்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் இளைஞர் அணி செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன் – கமல்ஹாசன் ஆகியோரது உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதை உக்கடம் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் தடுத்தார் .இதையடுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்கடம் போலீசில் ஏட்டு செந்தில்குமார் புகார் செய்தார் .போலீசார் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞரணி செயலாளர் முகமது இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் , சேக் மைதீன் மாவட்ட செயலாளர் ஷாஜகான் ஆகியோர் மீது கொலை மிரட்டல் அரசு ஊழியரை பணி செய்வதற்கு தடுத்தல் உட்பட 3 பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்துள்ளனர் –