கோவையில் 2 மாதங்களில் ரூ 19.75 கோடி மோசடி- சைபர் கிரைம் போலீசில்1,113 பேர் புகார்.!!

கோவையில் கடந்த 2 மாதங்களில் ரூ19 கோடியே 75 லட்சம் இழந்து விட்டதாக 113 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.ஆனால் வழக்கு பதிவு செய்ய சைபர் கிரைம் போலீசார் தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் பதிவாகும் மோசடி வழக்குகளில் ரூ.19 கோடி வரை இழப்பு இருக்கும். ஆனால் சைபர் குற்றங்களை அரங்கேற்றும் ஆசாமிகளிடம் கோவையை சேர்ந்தவர்கள் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ 19 கோடி இழந்துள்ளனர். மேலும் மாதந்தோறும் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக புகார் செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 500க்கு மேலானவர்கள் புகார் அளிக்கிறார்கள். பொதுவாக படித்தவர்கள் ஐ.டி. ஊழியர்கள் தான் சைபர் குற்றம் புரியும் நபர்களிடம் ஏமாந்து பணத்தை இழக்கிறார்கள். எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் படித்தவர்கள் தங்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் தெரிவதால் ஏமாற மாட்டோம் என்று நம்பிக்கையில் குற்றவாளிகள் விரிக்கும் வலையில் முதலீடு செய்து பணத்தை இழக்கிறார்கள்.எனவே சைபர் கிரைம் குற்ற விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொண்டு உஷாராக இருக்க வேண்டும். கோவை நகரில் கடந்த 2 மாதங்களில் மட்டும் மொத்தம் ஆயிரத்து 1,113 புகார்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 48 புகார்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . ரூ. 19 கோடியே 79 லட்சத்து29 ஆயிரத்து 655 ஐ மக்கள் இழந்துள்ளனர். ரூ 1 கோடியே 17 லட்சம் மீட்கபட்டுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் மோசடி ஆசாமிகளிடம் இருந்து மோசடி தொகையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.