பிரதமர் மோடி நாளை பல்லடம் வருகை – முழு விவரம் இதோ.!!

கோவை : பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை சூலூர் வருகிறார்.அவரது சுற்றுப்பயணம் முழு விவரங்கள் வருமாறு:-நாளை 27 – ந் தேதி ( செவ்வாய்) மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமானப்படை விமான நிலையம் வருகிறார். மதியம் 2.10 மணிக்கு சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அங்குள்ள மாதப்பூரில் 2.45 முதல், 3.45 வரை “என் மண், என் மக்கள் ” பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார். 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து, 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார். மாலை  5 -.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் .6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு செல்கிறார். அன்று இரவு அங்கு ஓய்வு எடுக்கிறார். அன்றைய தினம் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்கிறார். 28 – ந் தேதி (புதன்கிழமை) காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார். காலை 8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார்.. 9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
10 -.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார். 11.15 மணி முதல் 12.15 மணி வரை பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார். 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார். பிரதமரின் வருகையையொட்டி சூலூர், பல்லடம், மதுரை, தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.