கோவை பட்டதாரி பெண்ணிடம் ரூ.14 லட்சம் நூதன மோசடி- பீகாரை சேர்ந்த தந்தை, மகன் கைது..!!

கோவை உக்கடத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 22) பட்டதாரி. இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்தார் .அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்று அறிவிப்பை பார்த்தார். உடனே அவர் அதிலிருந்து செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார் .அதற்கு அவர்கள் விரைவில் அதற்கான அனுமதி வாங்கி தருவதாக கூறியதுடன் அதற்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர் .உடனே அவர் அதற்கான முன்பணத்தை அந்த நபர்கள் கூறிய வங்கி எண்ணுக்கு செலுத்தினார் இப்படி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ. 14 லட்சம் வரை அனுப்பினார் .ஆனால் அவரிடம் பேசிய நபர்கள் பன்னாட்டு நிறுவனத்திற்கான அனுமதியை வாங்கி கொடுக்கவில்லை. இது பற்றிய புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .அதில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராம் பிரவேஷ் பிரசாந்த் (வயது 54) அவரது மகன் சுராஜ் குமார் (வயது 24) ஆகியோர் இந்த மோசடியை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்தி விசாரணையில் தந்தை மகன் 2பேரும் ஒரு மோசடி வழக்கில் கைதாகி ஜார்கண்ட் சிறையில் இருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் ஜார்கண்ட் மாநிலம் சென்றனர். பின்னர் அவர்கள் தந்தை மகன் 2 பேரையும் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்..