விலை போர்-ஐ உருவாக்கிய ரிலையன்ஸ்… அலறும் FMCG நிறுவனங்கள்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் முன்னணி FMCG நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி உடன் நேரடியாக போட்டிப்போட சுமார் 30 முதல் 35 சதவீத குறைவான விலையில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.

பணவீக்கம் நிறைந்த காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு மக்களுக்கு சாதகமாக இருந்தாலும், பெரிய நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகிறது.

முகேஷ் அம்பானி துவங்கியுள்ள விலை போர் பல முன்னணி மற்றும் வெளிநாட்டு FMCG நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியமால் தங்களின் தயரிப்புகளின் விலையையும் குறைக்க துவங்கியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் சமீபத்தில் அறிமுகம் செய்த கேம்பா கோலா கூல்டிரிங்ஸ் ஏற்கனவே உள்ள கூல்டிரிங்ஸ் நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெப்சி, கோகோ கோலா போன்ற நிறுவனங்களை விடவும் குறைவான விலையில் அளித்து வருகிறது.

கேம்பா கோலா கூல்டிரிங்ஸ் 200ML 10 ரூபாய்க்கும், 500ML 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ரிலையன்ஸ் FMCG இன் பர்சனல் மற்றும் ஹோம் கேர் பிரிவில் நுழைந்து 30 முதல் 35 சதவீதம் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் RCPL, FMCG பிரிவு மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) இன் தயாரிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கும்.

RCPL மூன்று பிராண்டுகளுடன் சந்தைக்கு வந்துள்ளது – பியூட்டி சோப் பார் பிரிவில் க்ளிம்மர், ஹெர்பல்-நேச்சுரல் ஸ்பேஸில் கெட் ரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் சந்தையில் பூரிக்.

HUL ஐப் போலவே, அதன் பாத்திரங் கழுவும் சோப் பிராண்டான டோஸோ திரவ மற்றும் பார்களுடன் பொது வர்த்தகத்தில் அறிமுகம் செய்துள்ளது. கூடுதலாக, இது ஹோம்கார்டு டாய்லெட் மற்றும் ஃப்ளோர் கிளீனர்கள் மற்றும் என்ஸோ சலவை சோப்பு பவுடர், திரவம் மற்றும் பார்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய எஃப்எம்சிஜி பிளேயரான ஹிந்துஸ்தான் யூனிலீவர் (HUL) உடன் நேரடிப் போட்டியை ஆரம்பித்துள்ளது. HUL நாட்டின் மிகப்பெரிய அழகு சோப்பு மற்றும் பாத்திரங்கழுவி பிராண்டுகளை சொந்தமாக வைத்துள்ளது. HUL இன் Lux, Dove, Pears மற்றும் Lifebuoy ஆகியவை அழகு சோப்பு சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்கு இணையாக ரிலையன்ஸ் நிறுவனம் அதற்குக் குறைவான விலையை நிர்ணயித்து சந்தையில் விற்பனைக்கு விடவுள்ளது.

RCPL அதன் க்ளிம்மர் அழகு சோப்புகள், கெட் ரியல் நேச்சுரல் சோப்புகள் மற்றும் ப்யூரிக் ஹைஜீன் சோப்புகளின் விலையை ரூ. 25 என நிர்ணயித்துள்ளது, இது முன்னணி பிராண்டுகளான லக்ஸ் (100 கிராம் ரூ. 35), சந்தூர் (100 கிராம் ரூ. 34) டெட்டால் (ரூ. 40க்கு 75 கிராம்) தயாரிப்புகளை விட மிகக் குறைவான விலையாகும்.

அதனைத் அதன் சலவை திரவ சோப்பு கலவையை என்ஸோ 2 லிட்டர் ஃப்ரண்ட் லோட் மற்றும் டாப் லோட் திரவ சோப்பு விலைகள் ரூ. 250 (ஜியோ மார்ட்டில்) ஆக நிர்ணயித்துள்ளது. 2 லிட்டர் சர்ஃப் விலையுடன் (ரூ.340) ஒப்பிடும்போது மிகக் குறைந்ததாகவே உள்ளது.

அதேசமயம், டிஷ் வாஷ் செக்மென்ட்டில், பார்களுக்கு ரூ.5, 10 மற்றும் 15 என்ற கவர்ச்சிகரமான விலையுடன் தொடங்கியுள்ளது. மேலும் ரூ.10, ரூ.30 மற்றும் ரூ.45 ஆகிய விலைப் புள்ளிகளில் திரவ ஜெல் பேக்குகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது அழகு சாதன பொருட்கள் விற்பனை சந்தையில் நுழைந்து பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட தயாராகி வருகிறது.

அழகு மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்களுக்கான தேவை மற்றும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையின் வளர்ச்சி ஆகியவை இத்துறையில் இறங்க முகேஷ் அம்பானியை தூண்டியுள்ளது, என்றால் மிகையில்லை.

ரிலையன்ஸ்-க்கு இந்த விலை போர் ஒன்றும் புதியது இல்லை, 500 ரூபாய்க்கு செல்போன் விற்பனை செய்த காலத்தில் இருந்து சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் வரையில், விலை போர்-ஐ உருவாக்கி அதன் மூலம் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.