பொன்னியின் செல்வன் பெயரை முழுமையாக அழைக்க வேண்டும் – கோவை வக்கீல்கள் படக்குழுவினருக்கு நோட்டீஸ்..!!

கோவை: கல்கியால் எழுத்தப்பட்ட பொன்னியின் செல்வன் என்ற நாவலை லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க மணி ரத்னம் இயக்கி உலகம் முழுவதும் வெளியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் பொன்னியிம் செல்வன் என்ற தலைப்பை Ps-1 என்று சுருக்கி விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த சுருக்கு வடிவம் குரிசெடஸ் என்ற தப்பதகரை குறிப்பிடும் வகையில் இருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வன் என்பது சோழர் காலத்து மன்னர்களையும், வீரர்களையும் குறிப்பிடக்கூடிய காவியமாக பார்க்கப்படுகிறது. எனவே பெயரை அப்படியே பொன்னியின் செல்வன் என பயன்படுத்த வேண்டும் என உரிமை கோரிக்கை நோட்டீசை லைகா தயாரிப்பு நிறுவனர் சுபாஸ்கரன் , இயக்குனர் மணிரத்னம் , நடிகர் விக்ரம் , ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் அவர்கள் அதனை ஏற்று பொன்னியின் செல்வன் என்றே பயன்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட நடிவடிக்கை எடுக்க உள்ளதாக கோவையை சேர்ந்த வக்கீல்கள் கூட்டாக அறிவித்துள்ளனர் .