இலவச பேருந்தில் ஏறி.. ஓசி டிக்கெட் எனக்கு வேண்டாம்… இந்த காசு என அடம்பிடித்த மூதாட்டி- கோவையில் வைரல்..!!

கோவை:
அரசு சாதாரண பஸ்களில் பயணிக்கும் பெண்களுக்கு இலவசம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு அதற்கான டிக்கெட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ஓசியில் நாம் அரசு பஸ்சில் பயணிக்கலாம் என்று பேசினார். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பஸ்சில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து டிக்கெட்டை கேட்டுள்ளார். அதற்க்கு கண்டக்டர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கட் கொடு என்று ஆவேசமாக கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீண்ட நேரம் கண்டக்டரிடம் விவாதத்தில் ஈடுபட்ட அந்த மூதாட்டி ஒருவிதமாக சமாதானம் அடைந்தார். இந்த சம்பவத்தை அதே பஸ்சில் பயணம் செய்த யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ கோவையில் வைரலாகி வருகிறது.