பொங்கலோ! பொங்கல்!! நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!!

நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்…

பொங்கல் பற்றி சில சுவாரசிய தகவல்கள் இதோ...

உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியாதலாக கொண்டாடப்படுகிறது இந்த பண்டிகை.  கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்பணிக்கப்படுகிறது…
நமது கலாச்சாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். மக்கள் தை பொங்கல்,மாட்டு பொங்கல்,காணும் பொங்கல்,திருவள்ளுவர் தினம்,தை பூசம் சிறப்பாக கொண்டாடுவர்.
இந்த நாளில் அதிகாலையில் எழுந்து  புதிய  நெல்லிலிருந்து தயார் செய்யப்பட்ட அரிசி, பானையில்  சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து செங்கரும்பு,புது மஞ்சள்,பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள் ஆகியவை சூரிய தேவனுக்கு பட்டியலிட்டு பொங்கலோ பொங்கலோ என்று மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து வழிபாடு செய்வர் .
முதல் நாள் போகி பண்டிகை: பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் தேவையில்லாத பொருட்கள் அப்புறப்படுத்துவார்கள் .
இரண்டாம் நாளான தை பொங்கல் : அன்று புது பானையில் பொங்கல் செய்து அதனை முதலில் சூரியனுக்கு படைப்பார்கள்.பின் குடும்பத்தினர் உண்டு மகிழ்வார்கள்.
மூன்றாம் நாள் மாட்டு பொங்கல் : உளவு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும்  கால்நடைகளுக்கு நன்றி கூறும் திருநாள் ஆகும். அன்றைய நாளில் கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து பொங்கல் செய்து கொண்டாடுவார்கள்.
நான்காம் நாள் காணும் பொங்கல் : இந்த பண்டிகை அன்று உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களை காணுதல் மற்றும் பெரியவர்கள் ஆசி பெறுதல் போன்றவை ஆகும்..
‘தமிழர் தம் மண்ணின் பெருமைக்கும் அவர்தம் மரபுக்கு புகழ் சேர்க்கும் அற்புத திருநாள்’
 எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக “அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ”