நள்ளிரவில் பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்த 9 கொள்ளையர்கள்- மின்னல் வேகத்தில் கைது செய்த கோவை போலீசார்..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சங்கோதி பாளையம், செல்லப்பம்பாளையம், ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் பட்டா கத்திகளுடன் வீதிகளில் உலா வந்தும், வீடுகளின் கதவுகளை தட்டியும். ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியும் பணம் செல்போன்களை பறித்துச் சென்ற சம்பவம் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.இதை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டிஎஸ்பிஆனந்த் ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் தனிப்படை போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 3 பேரையும் அதனை தொடர்ந்து சத்தியமங்கலத்தில் 2 பேரையும் ,புளியம்பட்டியில் 6 பேரையும் என மொத்தம் 9 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திரோஷன் என்ற சூர்யா ( வயது 22) விஜயராஜ் ( வயது 22) ரோஹித் (வயது 20) வாஞ்சிநாதன் (வயது 19) திருமலை (வயது 23) கார்த்தி ( வயது 20 )மற்றும் 3 பேர்இளஞ்சிறார்கள் என்பது தெரியவந்தது. 9 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் 3பட்டாக்கத்திகள், 15 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் வேறு ஏதேனும் குற்ற செயல்களில் தொடர்புடையவர்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது .இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கருமத்தம்பட்டி பகுதியில் பீதியை ஏற்படுத்திய கொள்ளையர்களை மின்னல் வேகத்தில் கைது செய்த கருமத்தம்பட்டி போலீசாரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.