பாத்திரக்கடையில் ஷட்டரை உடைத்து 6 லட்சம் மதிப்புள்ள எக்கு சுருள் கொள்ளை: வாலிபர் கைது- உரிமையாளரின் மகன் உள்பட 3 பேர் தலைமறைவு.!!

கோவை காந்திபுரம் 3&வது வீதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ராஜ் (வயது 63). இவர் அந்த பகுதியில் பாத்திரகடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது கடையின் முன் பக்க ஷட்டரை திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கடையில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான எக்கு சுருளை திருடி சென்றனர். இது குறித்து கிறிஸ்டோபர் ராஜ் காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய கணபதியை சேர்ந்த சுல்தான் என்கிற வேலு (37) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாத்திரக்கடை உரிமையாளரின் மகன் தனசேகரன் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.