கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் தனுஸ்ரீ (வயது20) இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .இவர் தைராய்டு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தந்தை நடராஜ் சிறுமுகை போலீசார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Leave a Reply