கோவையில் போலீசார் அதிரடி சோதனை: மூட்டை மூட்டையாக ஏராளமாக சிக்கிய போதைப் பொருட்கள்..!

கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில்,
கஞ்சா , குட்கா மற்றும் போதை மாத்திரைகள் தொடர்பான, குற்றங்களை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைத்து கண்காணித்து வந்த நிலையில், E2 பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமையில் , அவினாசி ரோடு , தொட்டிப்பாளையம் பிரிவு . சுரபி நர்சரி அருகே , வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது , TN 07 P 2277 Honda City வாகனத்தை சோதனை செய்ததில் , 10 கிலோ கஞ்சாவுடன் சேர்ந்து காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மேற்படி காரின் ஓட்டுநர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கங்காபிரசாத் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் தங்கியிருந்த நேரு நகர் , இளங்கோ நகர் ஹவுசிங் யூனிட்டில் இருந்த, அவர் வீட்டிலிருந்து, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக, பதுக்கி வைத்திருந்த 84 கிலோ கஞ்சாவும் , வீட்டிலிருந்த கஞ்சாவை விற்பனை செய்ய பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களும், பறிமுதல் செய்யப்பட்டது . இவர் மீது E2 பீளமேடு காவல் நிலைய குற்ற எண் . 863/22 u / s 8 ( c ) , 20 ( b ) ( ii ) ( c ) & 25 of NDPS Act ன் படி வழக்கு பதிவு செய்து , நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார் .

மேலும் இதுபோன்று சி 4 ரத்தினபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மலையாள சமாஜ் பள்ளி அருகே , சந்தேகத்திற்கிடமாக நின்றுக் கொண்டிருந்த ரத்தினபுரியைச் சேர்ந்த விவேக் பாரதி ( 18 ) , சியாம் ஜெபதுரை ( 17 ) மற்றும் தேனியைச் சேர்ந்த தனபாலன் ( 19 ) ஆகியோரை பிடித்து விசாரிக்க அவர்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போதை மாத்திரைகள் 1 ) Pyeevon Spas Plus ( Tramodol ) -192 Nos . , 2 ) Spass Maxx ( Tramodol ) – 160 Nos மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் Yamaha R15 ( TN 66 AF 9959 ) ஆகியவற்றை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது . மேற்கண்ட நபர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் காளப்பட்டியில் உள்ள பாலாஜி மெடிக்கல்ஸ் கடையை நடத்தி வரும் கரிகாலன் ( 49 ) என்பவரிடமிருந்து Pyeevon Spas Plus ( Tramodol ) – 1160 Nos போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது . மேற்படி நபர்கள் மீது C4 ரத்தினபுரி காவல் நிலைய குற்ற எண் . 478/2022 u / s 276 , 336 IPC r / w 8 ( c ) , 22 ( b ) NDPS Act ன் படி வழக்கு பதிவு செய்து , நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர் .

மேலும் , ரத்தினபுரி , சின்னத்தம்பி கவுண்டர் வீதியில் இயங்கி வரும் ராணி மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 89 கிலோ கைப்பற்றப்பட்டு , சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் வைத்திருந்த ரத்தினபுரியைச் சேர்ந்த மாமுண்டி ( 55 ) என்பவர் கைது செய்யப்பட்டார் . மேற்படி நபர் மீது C4 ரத்தினபுரி காவல் நிலைய குற்ற எண் . 479/2022 u / s 273 , 328 IPC r / w 7 ( 1 ) ( 24 ) ( 1 ) COTPA Act ன் படி வழக்கு பதிவு செய்து , நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார் . இவ்வழக்கை கண்டுபிடித்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள், அனைவரையும், கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார் . தடை செய்யப்பட்ட கஞ்சா , குட்கா மற்றும் போதை மாத்திரைகளை பொதுமக்களுக்கு வியாபாரம் செய்யக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .