வால்பாறை இஞ்சிப் பாறை எஸ்டேட்டில் கரடி தாக்கி ஒருவர் படுகாயம்- பீதியில் மக்கள்..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இஞ்சிப் பாறை எஸ்டேட்டில் பிளம்பரமாக பணிபுரிந்து வருபவர் தங்கம் வயது 53 இவர் நேற்று இரவு எஸ்டேட் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் பயணிகள் நிழற்குடை அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென பாய்ந்து வந்த கரடி மூர்க்கத்தனமாக இவரின் நெற்றி, தோள்பட்டை, இடதுகை உள்ளிட்ட பகுதிகளில் பாய்ந்து  கடித்து குதறி தாக்கியுள்ளது இதில் தங்கம் அலறியபடி ரத்தவெள்ளத்தோடு ஓடியுள்ளார் அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்தவர்கள் சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டு கரடியை விரட்டியுள்ளனர் பின்பு அதே ஆட்டோவில் கரடி தாக்கி படுகாயமடைந்த வரை ஏற்றி ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்துள்ளனர் சிறிது தூரம் சென்றபோது தகவலறிந்து அங்கு வந்த ஆம்புலன்சில் சம்பந்தப்பட்ட மானாம்பள்ளி வனச்சர அலுவலரும் தங்கத்தை ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தணியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கரடி தாக்கிய இஞ்சிப் பாறை எஸ்டேட் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் போதிய தெருவிளக்குகள் இல்லாமல் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதாலும், பயணிகள் நிழற்குடை பழுதடைந்த நிலையில் உள்ளதாலும் அப்பகுதியில் புதர் மண்டி கிடப்பதினாலும் கரடி நடமாட்டத்தை அறிய முடியாமல் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்கும் வகையில் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போதிய தெருவிளக்கு அமைக்கவும், முட்புதர்களை அகற்றவும்,பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட நகராட்சியின் நகர்மன்ற தலைவரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அறிந்த நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மருத்துவமனைக்கு சென்று கரடிதாக்கி படுகாயமடைந்த வரை சந்தித்து கூறினார் இச்சம்பவம் இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது