கோவை காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்..!

கோவை  : காவல்துறையில் பணியாற்றும் காவலர் முதல் அதிகாரிகள் வரை நேரம் பார்க்காமல் ஓய்வின்றி வேலை பார்ப்பதால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறர்கள்.இதனால் சில காவலர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள்.மேலும் சிலர் அவர்கள் வீட்டில் நடந்துள்ள துயர சம்பவங்களை மனதில் நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகிறர்கள் .இதை தடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கோவை மாநகர காவல் துறையில் இப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டது.இவர்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.இதில்போலீஸ் துணை கமிஷனர் சுகாசினி ,கோவை அரசுகலைக் கல்லூரி பேராசிரியை ராஜகுமாரி,மற்றும் மனோதத்துவ டாக்டர்கள்,பயிற்சி அளித்தனர்.