காவலர் குடும்ப பெண்களுக்கான கடைகள் – இன்று திறந்து வைத்தார் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் .!!

கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் நலன் கருதி காவலர் குடும்பப் பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து அவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஆவின் பாலகம் அருகிலும் ,காந்திபுரம் காவல் ஆவின் பாலகம் அருகிலும் புதிதாக 2 கடைகள் கட்டப்பட்டது. இந்த கடைகளின் திறப்பு விழா இன்று காலையில் நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் இன்ஸ்பெக்டர்கள் பிரதாப் சிங், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.