பெங்களூருக்கே சவால் விட வருகிறது ஓசூர் டெக் சிட்டி..!

சூர் : இந்தியாவில் சிலிக்கான் வேலி என்ற புனைப்பெயருடன் ஐடி துறையில் பெங்களூர் முன்னிலையில் உள்ளது இந்நிலையில் தான் பெங்களூருவுக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ‘டிஎன் டெக் சிட்டி’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 500 ஏக்கரில் உலகத்தரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டெக் சிட்டி அமைக்கும் பணி இன்னும் ஓராண்டுக்குள் துவங்கப்பட வாய்ப்புள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழில் நகரங்களில் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்டவை முக்கியமானதாகும். இதேபோல் தமிழ்நாட்டின் பிற நகரங்களும் தொழில்துறையில் சாதித்து வருகின்றன.

அந்த வகையில் தான் தமிழ்நாட்டில் தொழில் துறையில் முக்கிய நகரங்களின் ஒன்றாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உள்ளது. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஓசூர் முக்கிய பங்காற்றி வருகிறது.

மேலும் ஓசூரை சுற்றிய கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதியிலும் பல நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அதன்படி எலக்ட்ரானிக் வாகனங்களுக்கான ஓலா, அதெர், டாடா எலக்ட்ரானிக்ஸ், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளது. சிம்பிள் எலெக்ட்ரிக் நிறுவனம் தருமபுரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலையை நிறுவி வருகிறது. ஸ்ரீ வாரு மோட்டார்ஸ் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனமான பாரத் ஆல்ட் ஃப்யூயல் இந்த பகுதியில் ரூ.250 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளன. இதனால் தான் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக ஓசூர் உருவெடுத்துள்ளது.

மேலும் ஓசூரை சுற்றிய கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதியிலும் பல நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அதன்படி எலக்ட்ரானிக் வாகனங்களுக்கான ஓலா, அதெர், டாடா எலக்ட்ரானிக்ஸ், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளது. சிம்பிள் எலெக்ட்ரிக் நிறுவனம் தருமபுரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலையை நிறுவி வருகிறது. ஸ்ரீ வாரு மோட்டார்ஸ் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனமான பாரத் ஆல்ட் ஃப்யூயல் இந்த பகுதியில் ரூ.250 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளன. இதனால் தான் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக ஓசூர் உருவெடுத்துள்ளது.

மேலும் விஷுவல் கேபிடலிஸ்ட் சார்பில் வெளியிடப்பட்ட உலகின் அதிவேக மக்கள்தொகை வளர்ச்சி கொண்ட நகரங்களின் பட்டியலில் ஓசூரும் இடம்பிடித்தது. 2021ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் ஓசூர் 13வது இடத்தை பிடித்தது. கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓசூர் தற்போது தொழில்வளம் மிக்க நகரமாக உருமாறி உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா எல்லையில் அமைந்து இருப்பது, பெங்களூரை போல் தட்பவெப்ப சூழலை கொண்டிருப்பது, சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடத்தில் அமைந்திருப்பது உள்ளிட்டவற்றால் ஆண்டுதோறும் ஓசூரில் தொழில் தொடங்க விரும்புவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் திறமையான பணியாளர்கள் கிடைப்பது, குறைந்த விலையில் நிலம் கிடைப்பது, அருகிலேயே 3,000க்கும் மேற்பட்ட பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருப்பது உள்ளிட்ட காரணங்களும் முதலீட்டாளர்கள் ஓசூரை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்நிலையில் தான் மின்சார வாகனங்கள் உற்பத்தி உள்பட பிற தொழில்சாலைகள் நிறைந்து தொழில் உற்பத்தியின் மையாக ஓசூர் விளங்கி வரும் சூழலில் தான் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது சமீபத்திய தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ‘டிஎன் டெக் சிட்டி'(TN Tech City) எனும் திட்டத்தை அறிவித்தார். இது சென்னை, கோவை மற்றும் ஓசூர் நகரங்களில் செயல்படுத்தப்படும் என கூறினார். இதன்மூலம் இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் நிறைந்து சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூருவுக்கு அருகே தமிழ்நாடு அரசு புதிய டெக் சிட்டியை நிறுவ உள்ளது.

அதன்படி தான் இந்த திட்டத்துக்கு ஓசூர் தேர்வு செய்யப்ப்டடுள்ளது. இதன்மூலம் அங்க 500 ஏக்கரில் டெக் சிட்டி உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் ஓசூரை இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சிப்காட் சார்பில் நிலம் அடையாளம் காணும் பணி தொடங்க உள்ளது. மேலும் ஓசூர் என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகவை இணைக்கும் வகையில் பெங்களூரின் அருகே அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்.

இதனால் பெங்களூரில் புதிதாக நிறுவனங்கள் தொடங்க விரும்புவோர் தமிழ்நாட்டின் ஓசூருக்கு படையெடுக்கலாம். ஏனென்றால் பெங்களூரை காட்டிலும் ஓசூரில் நிலத்தின் விலை, இதர செலவுகள் குறைவாக இருக்கலாம். மேலும் பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து தமிழ்நாட்டின் ஓசூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது மற்றும் பெங்களூர்-ஓசூர் இடையே ஹெலிகாப்டர் சேவை தொடங்கும் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் பெங்களூரைபோல் தகவல் தொழில்நுட்ப துறையில் ஓசூர் நகரம் இந்தியாவின் சிறந்ததொரு இடத்தை பிடிக்க வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகுவதோடு, கர்நாடகாவின் பெங்களூருக்கு சவால் விடுக்கும் வகையில் ஓசூரை தமிழ்நாடு அரசு வளர்க்க அடியெடுத்து வைத்துள்ளது என்பதில் ஐயமில்லை.

இந்த திட்டம் பற்றி விசாரித்தபோது தமிழ்நாடு அரசு சார்பில் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும் வகையில் புதிய நகரத்தை உருவாக்குவதே இந்த டிஎன் டெக் சிட்டியின் நோக்கமாகும் என்பது தெரியவந்தது. மேலும் அங்கு பணிபுரியும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனே கிடைக்கும் வகையிலும் இந்த டெக் சிட்டி திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஒட்டல்கள், கூட்ட அரங்கு, பொழுதுபோக்கு வசதிகள், பள்ளிகள், ஹெலிபேட் வசதிகளுடன் இந்த நகரம் உருவாக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிப்காட் சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு இன்னும் ஓராண்டில் திட்டம் துவங்கப்படும் என கூறப்படகிறது. இதனால் இந்த திட்டத்துக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் உள்கட்டமைப்பை பெரிய அளவில் உருவாக்க வேண்டும். உலகம் எங்கிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்க கட்டடங்கள் உலக வர்த்தக மையத்திற்கு இணையாக முன்மாதிரியான வடிவமைப்பு இருக்க வேண்டும். மேலும் டெல்லிக்கு அருகே இருப்பதன் மூலம் பரிதாபாத், நொய்டா, குருகிராம் நகரங்கள் டெல்லியை போன்ற நல்ல முன்னேற்றம் கண்டது. அதேபோன்று பெங்களூர் நகரை பயன்படுத்தி ஓசூரையும் மேம்படுத்த வேண்டும்” என்றார். என்று சம்பந்தம் கூறினார். மேலும் ஓசூரில் டெக் சிட்டி அமைவதன் மூலம் ஐடி மற்றம் ஐடிஇஎஸ் துறையில் நாட்டில் 4வது இடத்தில் உள்ள தமிழகத்தை 2வது இடத்துக்கு முன்னேற்ற வாய்ப்பும் உருவாகலாம் எனவும் ஐடி துறையினர் கணித்துள்ளனர்.