பொங்கல் விடுமுறை தினத்தில் 4 -வது மாடியில் நின்று பட்டம் பறக்க விட்ட சிறுவன் தவறி விழுந்து பரிதாப பலி..

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்த பிரபாகரன் .அவரது மகன் சூரிய பிரபாகர் (வயது 10) அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களது வீடு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் உள்ளது.இந்த நிலையில் மாணவன் சூரிய பிரபாகர் பொங்கல் விடுமுறையை யொட்டி தங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மொட்டை மாடியில் நின்று பட்டம் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான் அப்போது திடீரென நிலை தடுமாறி 4-வது மாடியில் இருந்து தவறி தரையில் விழுந்தான் .இதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும்பலன் அளிக்காமல் இறந்தான். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- மாடியில் நின்று பட்டம் பறக்க விடக்கூடாது .தரையில் சமவெளியில் நின்று யாருக்கும் இடையூறு இல்லாத இடத்தில் பட்டம் பறக்க விட வேண்டும். இது போன்ற ஆபத்தான முறையில் பட்டம் விடக்கூடாது பெற்றோரும் இதனை கண்காணித்து தடுக்க வேண்டும். அந்தந்த போலீஸ் நிலைய பகுதிகளை சேர்ந்த போலீசார் இது குறித்து உரிய அறிவுரைகளை குடியிருப்பவர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்த பட்டுள்ளது என்றார்.