ஆம்னி பேருந்து புதிய கட்டண விலைப்பட்டியல் வெளியீடு – முழு விவரம் இதோ..!

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் சென்னையில் இருந்து பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்வலுக்கு செல்ல டிக்கெட்களுக்கான முன் பதிவுகளை செய்ய துவங்கி இருக்கின்றனர்.

முந்தைய கட்டணங்களை விட இரண்டு மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதாகவும், இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு ஆம்னி பஸ்களின் ஆட்டத்திற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும் என்றும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்ச்ய்வார்த்தை நடத்தினார். அதன் பின் இன்னும் ஓரிரு நாட்களில் புதியக் கட்டண விவரங்களை அனைத்து ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்கள் சங்கம் கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.

அந்த விபரங்கள் இதோ:

சென்னை to கோவை – ரூ.1815 முதல் ரூ.3025வரை

சென்னை to மதுரை – ரூ.1776 முதல் ரூ.2688 வரை

சென்னை to சேலம் – ரூ.1435 முதல் ரூ.2750 வரை

சென்னை to பழனி – ரூ.1650 முதல் ரூ.2750 வரை

சென்னை to தென்காசி – ரூ.2079 முதல் ரூ.3465 வரை

சென்னை to நெல்லை – ரூ.2063 முதல் ரூ.3437 வரை.