இனி அனுமதியின்றி எந்த ட்ரோன் பறக்க முடியாது… வந்தாச்சு ட்ரோன் டிடெக்டர்… அரசின் அசத்தல் திட்டம் .!

கேரள மாநிலத்தில் காவல்துறையின் அனுமதி பெறாமல் பறக்கும் ட்ரோன்களை பிடிக்க வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி பகுதியில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்த கேரள போலீசார் ஏற்பாடு செய்திருந்த 15 வது கோகோன் மாநாடு முதல்வர் பினராய் விஜயனால் துவங்கி வைக்கப்பட்டது. இதில் 1200க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த மாநாட்டில் ஈகிள் ஐ என்ற பெயரில் ஒரு ட்ரோன் டிடெக்டர் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாகனம் பறக்கும் ஆளில்லா விமானங்களை பிடிக்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், ஆள் இல்லாத விமானத்தை கைப்பற்றும் வாகனம் நடைமுறைக்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்த டிடெக்டர் மூலமாக 5 கிலோமீட்டர் வரை இருக்கும் ட்ரோன்களை அடையாளம் கண்டறிய முடியும். அத்துடன் அனுமதி இன்றி பறக்கின்ற இந்த ட்ரோன்களை வாகனத்தில் இருக்கும் லேசர் ரேடார் கன் மூலமாக அழிக்கவும் முடியும். இந்த வாகனம் என்பது லட்சம் செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.