மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தேசிய பறவை மயில்: வனத் துறையிடம் தகவல் கொடுத்தும் அலட்சியம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தேசிய பறவை மயில்: வனத் துறையிடம் தகவல் கொடுத்தும் அலட்சியம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோவை, குனியமுத்தூர் நேரு கல்லூரி அருகே மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தேசிய பறவை மயில் தூக்கி வீசப்பட்டு பறக்க முடியாமல் உயிருக்கு போராடி தவித்து கொண்டு இருந்தது உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை அலுவலர் சந்தியாவை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். தகவல் கொடுத்து மூன்று மணி நேரம் ஆகியும் வனத்துறையினர் அங்கு வரவில்லை. இந்நிலையில் பகுதி பொதுமக்கள் மயிலுக்கு முதல் உதவியாக காயம் பட்ட பகுதியில் மஞ்சள் பூசி சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் அந்த வழியாக சென்ற காவல்துறை ரோந்து வாகன காவலர்களிடம் இதுகுறித்து கூறிய போது எங்களுக்கு வேறு வேலை இல்லையா ? … என அலட்சியமாக பதில் கூறிவிட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

தேசிய பறவை மயிலின் உயிரை காப்பாற்ற முடியாத கோவை மாவட்ட காவல்துறை மற்றும் வனத் துறையினரை பொதுமக்களின் உயிரை எவ்வாறு பாதுகாப்பார்கள் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.