கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபினின் மனைவி நீதிமன்றத்தில் வாக்குமூலம்..!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்தாண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்தது. காரிலிருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்கொலை தாக்குதல் என காவல் துறையினர் உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபினின் நண்பர்களான இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து NIA அதிகாரிகள் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விசாரணை மேற்கொண்டனர். அதில் 7 பேர் என்.ஐ.ஏ.,வின் விசாரணையில் காவலில் உள்ளனர். இந்நிலையில், தற்கொலை தாக்குதல் சம்பவத்தில் உயரிழந்த ஜமேஷா முபினின் மனைவியிடம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஜமேஷா முபினின் மனைவி வாய் பேச முடியாத, காது கேளாதவர் என்பதால் எழுது மற்றும் சைகை மொழி பேசுபவர் உதவியுடன் வாக்குமூலம் பெறப்பட்டது. என்.ஐ.ஏ., வால் அழைத்து வரப்பட்டு, சம்பவம் தொடர்பாகவும், வீட்டில் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் விரிவாக வாக்குமூலம் பெறப்பட்டது. ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருக்கக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்