வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு – ஓய்வு பெற்ற பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை..!

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

தமிழக அரசின் பதிவுத் துறையில் கரூர் மாவட்டம் பதிவாளராக பணியாற்றியவர் மருதாச்சலம். இவர் பணியில் இருந்த போது வருமானத்துக்கு பொருந்தாத சொத்து சேர்த்ததாக கோவை சிறப்பு நீதிமன்றம் 2007 ஆம் மார்ச் 30-ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் 27 அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 64 சாட்சி பொருள்கள் குறிக்கப்பட்டன. இந்நிலையில் கோவை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்துலதா தீர்ப்பளித்தார். அதில் மருதாசலத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.