காட்டு யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

காட்டு யானைகள் நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் இன்று சிறுகுன்றா சின்னப்பன் கல்லரை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நான்கு குட்டிகளுடன் சுமார் 11 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது இந்நிலையில் அருகே உள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறையில் பகலில் காட்டு யானைகள் காவலுடன் நிம்மதியாக தூங்கிய காட்சி…


கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட் தேயிலைத் தோட்டம் பகுதியில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன இந் நிலையில் இன்று ஒரு பகுதியில் சுமார் 6 யானைகள் நின்றிருந்தது அப்போது அதில் இரண்டு யானைகள் காவலுக்கு நின்றவாறு நான்கு யானைகள் படுத்து நிம்மதியாக உறங்கத் தொடங்கியது இந்த காட்சியை பார்த்த அவ்வழியாகச்சென்ற பொதுமக்கள் ஆச்சர்யமடைந்து சென்றனர்