இனி வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மட்டும் தான்-மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு!!

னி வருடத்திற்கு இது 12 மட்டும் தான். மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு..

சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் எரிவாயு வெளிச்சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டினை விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான் அதிகபட்சமாக எடுக்க முடியும் என்றும் அதாவது மாதத்திற்கு அதிகபட்சமாக 2 சிலிண்டர்கள் மட்டும்தான் எடுக்க முடியும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் மானிய விலையில் சிலிண்டர்களை பெறும் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மட்டுமே எடுக்க முடியும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.