மேக்கப் போட்டு செல்வதோடு சரி பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை பொதுமக்கள் கேள்வியால் நகர் மன்ற உறுப்பினர் வேதனை

மேக்கப் போட்டு செல்வதோடு சரி பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை பொதுமக்கள் கேள்வியால் நகர் மன்ற உறுப்பினர் வேதனை

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் ஜலாலுதீன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வால்பாறையில் நகராட்சியின் மூலம் கடந்த ஏழு மாதங்களாக எந்த ஒரு வளர்சிப்பணியும் நடைபெறவில்லை இதனால் பொதுமக்களிடம் பதில் சொல்லமுடியவில்லை என்றும், அனைத்து வார்டு பகுதிகளிலும் தெருவிளக்குகள் சம்பந்தமான பணி எதுவும் சரிவர நடைபெறுவதில்லை என்று கூறி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், நகர்பகுதியில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பெரும் வேதனையடைந்து வருவதாகவும் கழிப்பறை பணிகளை உடனடியாக செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம் நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர் மேலும் வால்பாறை நகர் பகுதியில் முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞரின் சிலை மற்றும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கவும் வலியுறுத்தி அனுமதி வழங்கிய மன்றத்திற்கு நன்றி தெரிவித்தனர்

அதைத்தொடர்ந்து 20 வார்டு நகர் மன்ற உறுப்பினர் பேசும் போது தான் ஒவ்வொரு மன்ற கூட்டத்திற்கும் மேக்கப் போட்டு செல்வதோடு சரி வார்டுக்கு தேவையான பணிகள் எதுவும் நடப்பதாக தெரியவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாகவும் கூறி மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுகோள் விடுத்தார் உறுப்பினர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் உரியமுறையில் நடவடிக்கை மேற்க் கொள்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து நகர்மன்ற கூட்டம் நிறைவடைந்தது