மக்களே உஷார்… தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய புயல் உருவாகிறது-வானிலை மையம் எச்சரிக்கை.!!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்றும், தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாகக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
நேற்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 8.30 மணியளவில் வடகிழக்கு அந்தமான் – நிகோபார் தீவு – போர்ட்பிளேரிலிருந்து 140 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர் கடற்கரை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிசிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக் கூடும்.
சென்னையை பொறுத்தவரை..
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.