தஞ்சையில் புதிய பள்ளி கட்டிடத்தை மேயர் சண்.ராமநாதன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்..!

தஞ்சாவூர் மாநகராட்சி 33 வது வார்டில் மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வந்தது. அந்த பள்ளி கட்டிடம் பழுதானதால் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக ரூபாய் ஒரு கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதற்காக மாநகராட்சியில் இருந்து ஒரு கோடி செலவில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகும் பூபதி, மாநகர அமைப்பாளர் ராஜசேகரன், மண்டல தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் வனிதா செல்வகுமார்,  தி.லெனின், சுந்தரச.செந்தில், மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.