இனி யாரும் பசியுடன் இருக்க வேண்டாம்… சுட.. சுட.. ஒரே நிமிடத்தில்… இலவச ரொட்டி வழங்கும் தானியங்கி இயந்திரம்-துபாய் முழுவதும் பொருத்தம்..!!

மிழகத்தில் பசியால் வாடுபவர்களின் துயர் துடைக்க தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த திட்டம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த எண்ணத்தை செயல்படுத்தும் வகையில் துபாய் முழுவதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் அந்நாட்டு அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ளன.

துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக, மிக அதிகம். இதில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், ‘டெலிவரி’ ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பணத்தை சேமித்து குடும்பத்தினருக்கு அனுப்பும் வகையில் தினமும் 3 வேளைகள் சரியாக சாப்பிடாமல் இருந்து பணம் சேமித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இவர்களின் பட்டினியை போக்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் துபாயில் இலவச உணவு அளிக்கும், ‘வெண்டிங் மிஷின்’ நிறுவப்படும் எனத் தெரிவித்தார்.

அதன்படி நகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வெண்டிங் மிஷின்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த உணவு இயந்திரங்கள் செப்டம்பர் 17முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.துபாயின், ‘அஸ்வாக்’ மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், அரபி ரொட்டி மற்றும், ‘பிங்கர் ரோல்’ ஆகிய 2 வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன.இந்த இலவச உணவு திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் மட்டுமின்றி தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.