கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிங்கார வேலன். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது மகன் சவுரி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துள்ளார். அதனை அடுத்து அரசு கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பிக்க, டி.சி தேவைப்படுகிறது. ஆனால் பள்ளி கட்டணம் ரூ. 70 ஆயிரத்தை செலுத்ததால் முழு பணத்தையும் செலுத்தினால் தான் டி.சி தருவோம் என பள்ளி நிர்வாகத்தினர் கூறினர். கொரொனா காலத்தில் என்னால் சரி வர பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. தற்போது தன்னால் முடிந்தவரை பள்ளி கட்டணத்தை செலுத்தி விடுகிறேன். மகனின் டி.சி யை அளித்தால் கல்லூரியில் சேர்த் து விடுவேன் என பல முறை கூறியும் பள்ளி நிர்வாகம் டி.சி.யை தர மறுத்து வருகிறார்கள். எனவே டி.சி.யை பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.