தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு 10 வயது சிறுவன் பலியான சோகம்

ஒண்டிப்புதூர் செளடேஸ்வரி நகர் ரயில்வே பாலம் அருகில் 10வயது உள்ள சிறுவன் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். இந்த சிறுவன் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1.00மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. சிறுவனுடைய பெற்றோர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதேவேளையில் பள்ளிகள் விடுமுறை தினங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர் விளையாட செல்லும் போது பெற்றோர்கள் பாதுகாப்பான இடங்களில் விளையாட அறிவுறுத்தல் வேண்டும்.. இந்த விபத்தில் இறந்த சிறுவனுக்கு நீயூஸ் எக்ஸ்பிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம்