மலேசியாவிற்கு ரோஸ் வெங்காயம், சாம்பார் வெங்காயம் அனுப்புவதாக கூறி ரூ.50 லட்சத்தை ஏமாற்றிய கேடி கைது.!!

ஆவடி: உலக நாடுகளுக்கு அரிசி அனுப்புகிறேன் பருப்பு அனுப்புகிறேன் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை அனுப்புகிறேன் வெங்காயம் அனுப்புகிறேன் என் று தினசுதினசாக கூறி எப்படியெல்லாம் ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிக்க ஒரு கும்பல் தமிழகமெங்கும் உலா வருகிறது. அதை பற்றி  இப்போது பார்போம்…

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை புகார் மனுதாரர் கேட்பு முகாமில் பி எல் நாரப்பா என்கிற நடராஜன் (47) என்பவர் கொடுத்த புகார் மனுவில் தான் சென்னை அரக்கம்பாக்கம் பகுதியில் வசிப்பதாகவும் மெசர்ஸ் வரன் டி ரேடிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் விவசாய பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் மும்பையைச் சேர்ந்த சந்தீப் பவர் மும்பையில் கரிஷ்மா இன்டர்நேஷனல் எக்ஸிம் இந்தியா என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். மலேசியாவைச் சேர்ந்த பாலசிங்கம் என்பவர் கரிஷ்மா எக்ஸ் சிம் எஸ்டி என் பி எச் டி என்ற பெயரில் ஏற்றுமதி இறக்குமதி செய்து வருபவருடன் பங்குதாரராக சேர்ந்து ரோஸ் வெங்காயம் சாம்பார் வெங்காயம் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும் சந்தீப் ப்பவர் மற்றும் பாலசிங்கம் ஆகியோர் தன்னிடமிருந்து சாம்பார் வெங்காயம் ரோஸ் வெங்காயம் ஆகியவற்றை மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்வதாக ரூபாய் 50 லட்சத்தி 6 ஆயிரத்து 711ஐ வாங்கி விட்டு கொடுக்காமல் 2020ம் ஆண்டு முதல் ஏமாற்றி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் ஆவண  நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தீவிரமாக விசாரணை நடத்தி தலை மறைவாக இருந்த குற்றவாளி பிராடு சந்தீப் பவர் (35) தகப்பனார் பெயர் சங்கர் பால பவர் நந்தூர் சிங் கோட் போஸ்ட் சின்னார் தாலுகா நாசிக் மாவட்டம் மகாராஷ்டிரா என்பவனை லுக் அவுட் சர்குலர் மூலம் மும்பை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் கைது செய்யடு  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டான்..