சிங்காநல்லூர் – சாய்பாபா காலனியில் ரூ201 கோடியில் புதிய மேம்பாலங்கள் – கட்டுமான பணி விரைவில் தொடக்கம்.!!

கோவை சிங்காநல்லூர் சாய்பாபா காலனி பகுதியில் ரூ 201 கோடியில் புதிய மேம்பாலங்கள் விரைவில் கட்டப்பட உள்ளது .இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- சிங்கநல்லூரில் வசந்தா மில் ஜங்ஷனிலிருந்து உழவர் சந்தை வரை 2,400 மீட்டர் தூரத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ரூ.141 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ..இந்த மேம்பாலத்துக்கான டெண்டர் விடும் பணி நடைபெற்று வருகிறது .திருச்சி ரோட்டில் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சர்வீஸ் சாலைக்கான இடம் ஒதுக்கப்பட்ட பின் மேம்பால பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் .-இதே போல சாய்பாபா காலனி பகுதியில் ரூ.60 கோடியில் 1,200 மீட்டர் நீளத்துக்கு புதிய மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இந்த பாலம் முருகன் மில் பகுதியில் தொடங்கி எருக் கம்பெனி அருகில் முடிகிறது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். 2 பாலங்களும் சேர்ந்து மொத்தம் ரூ 201 கோடியில் கட்டி முடிக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.