சினிமா துறையில் உதயநிதி மட்டும் பிழைத்தால் போதுமா..? மற்றவர்கள் வாழ வேண்டாமா..? அண்ணாமலை பேட்டி..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, தமிழக மக்கள் காலையில் எழும்போது எதன் விலை உயர போகுதோ என்ற அச்சத்தில் தான் எழுகிறார்கள். ஆவின் நிறுவனத்தில் தொடர்ந்து பால் விலை அதிகரிக்கப்பட்டு வருவதால் விற்பனை குறைந்துள்ளது. விவசாயிகளிடம் பாலை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துவிட்டு மக்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். சினிமா துறையை பொறுத்தவரை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் மட்டும் பிழைத்தால் போதுமா.?

மற்றவர்கள் வாழ வேண்டாமா? இன்னும் எத்தனை நாட்களுக்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி சினிமா துறையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை நாங்களும் பார்க்க தான் போகிறோம். திமுக அரசுக்கு எதிராக 9 ஊழல் புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறியுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் என்றும் விமர்சித்துள்ளார்.