கோவை மத்திய சிறை காவலர்களுக்கு கொலை மிரட்டல் – கைதி மீது வழக்குப் பதிவு..!

கோவை: ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பானையத்தை சேர்ந்தவர் முகமது மெகபூப் அலி. இவரது மகன் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகின் ( வயது 29)தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இவர் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது,இதையடுத்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவரை பிடித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை பார்ப்பதற்கு அவரது தந்தை முகமது மெகபூப் அலி நேற்று அங்கு சென்றார்.அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டடிருந்த தலைமை வார்டன் தனவேந்திரன், சிறைகாவலர் ராகுல் ஆகியோரை ஆசிப் முஸ்தகின் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து தலைமை ஜெயிலர் சக்திவேல் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகின் மீது அரசு ஊழியரை பணிசெய்யவிடாது தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.