பேரிடர் மேலாண்மை குறித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி..!

கோவை:
பேரிடர் மேலாண்மை குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வருவாய் துறை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார். வருவாய் அதிகாரி லீலா அலெக்ஸ் முன்னிலை வகித்தார். இதில் தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது, மீட்பு பணி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது தீ தீயணைப்புத் துறையினர் விபத்தோ அல்லது கட்டிடம் இடிந்து விபத்து நிகழ்ந்தாலோ உடனடியாக விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பது குறித்து தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.