முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் அதிகரிப்பு-முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ₹25,000-ல் இருந்து ₹30,000-ஆக, கலைஞர் நூற்றாண்டையொட்டி ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் .

மேலும் மருத்துவ படி 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.குடும்ப ஓய்வூதியம் 12,500-ல் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்” என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதேபோல், முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு, தற்போது ஆண்டு ஒன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 50 ஆயிரம் ரூபாய் என்பது, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அவரை தொடர்ந்த பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் : “TNPSC தேர்வு விடைத் தாள்களை மதிப்பீடு செய்வதற்கு, பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அதிக கால தாமதம் ஏற்படுகிறது. எனவே, AI Automation மூலம் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்தார் .