தஞ்சாவூர் பருத்திக் கோட்டை கிராமத்தில் பாப்பாத்தி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா..!

சனாதனம் அடிப்படையாக அற உணர்வை போதிப்பதே தவிர பாகுபாடுகளையோ, வேறுபாடுகளையோ உணர்த்த கூடியது அல்ல. என்பதை உணர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை காணுகிற பாரதத்தில் வேண்டாத விஷயங்களை விதைப்பது ஏற்க தகுந்தது அல்ல என வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகா தேவ தேசிக பரமாச்சரிய சுவாமிகள் கருத்து தெரிவித்து உள்ளார்.
தஞ்சை மாவட்டம் பருத்திக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு. பாப்பாத்தி அம்மன் கோயில் குட முழுக்கு தமிழில் மந்திரங்கள் ஓதி வேளாக்குறிச்சி ஆதினம்  நடத்தி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் பருத்திக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு. பாப்பாத்தி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயில் குடமுழுக்கு இன்று நடைப்பெற்றது. இரண்டாம் கால யாக பூஜை பூரணாகதியுடன் நிறைவுபெற்று புனித நீர் கடம் யாகசாலையில் இருந்து புறப்பட்டது. மங்கள வாத்யங்கள் இசைக்க, தமிழில் மந்திரங்கள் ஓதி கடம் கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு கொண்டு வரப்பட்டது. கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேளாக்குறிச்சி ஆதினம் கோபுர கலசத்தில் புனித நீர் குடமுழுக்கு செய்து வைத்தார். ஏராளமானவர்கள் குடமுழுக்கை கண்டு  பாப்பாத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். முன்னதாக  குடமுழுக்கு விழாவிற்கு வருகை தந்த ஆதினத்திற்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆதினம். சனாதனம் ஒரு அறநெறி எல்லா சமயங்களுக்கும் பொதுவான நெறி. முற்காலத்தில் தோன்றிய சமயம் நமது இந்து சமயம் என்றார். இந்து சமயத்திற்கு பிறகுதான் மற்ற சமயங்கள் தோன்றியதாக குறிப்பிட்டார். மூத்த சமயம், முந்தைய சமயம் நமது இந்து சமயம் என்ற ஆதினம், சனாதனம் என்பது ஒரு வாழ்வியல் நெறி. ஏற்ற இறக்கங்கள். குறைகள், நிறைகள் எல்லாவற்றையும் களைவதற்கு தான்  நமது தோத்திரங்களும், சாத்திரங்களும் துணை நிற்கின்றன என கூறினார்.வேற்றுமையில் ஒற்றுமை காணுகிற பாரதத்தில் வேண்டாத விஷயங்களை விதைப்பது ஏற்க தகுந்தது அல்ல. புராணங்கள்  பொய் உறைப்பது அல்ல. ஆகமங்கள் அந்திய மொழி அல்ல. வேதங்கள் வேண்டாத மொழி அல்ல. எல்லாவற்றிலும் உள்ள நிறை குறைகளை களைந்து நமது வாழ்வியலுக்கு எது தேவையோ அதை எடுத்து கொள்ள வேண்டும். சனாதனம் அடிப்படையாக அற உணர்வை போதிப்பதே தவிர. பாகுபாடுகளையோ. வேறுபாடுகளையோ  உணர்த்த கூடியது அல்ல. என்பதை எல்லோரும் உணர்ந்து அதன் நெறி நிற்றல் வேண்டும் என ஆதினம் கேட்டுக் கொண்டார்.