விடுதியில் கோவை பல் டாக்டர் மர்ம மரணம்..

கோவை:  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ராகுல் ரங்கா ( வயது 34 )இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார் .அங்குள்ள வித்யா நகரில் கண் மருத்துவமனை டாக்டர்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று இவர் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்லவில்லை.இதனால் சந்தேகமடைந்து இவருடன் வேலை பார்க்கும் டாக்டர் கவுதம் ராஜ், அவருக்கு போன் செய்தார். ராகுல் ரங்கா போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவர் தங்கி இருந்த விடுதிக்கு வந்தார். அப்போது அவர் தங்கி இருந்த அறையின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது .பின்னர் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது டாக்டர் ராகுல் ரங்கா படுக்கையில் பேச்சு ,மூச்சு  இல்லாமல் கிடந்தார் . அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இவர் எப்படி செத்தார்? என்று தெரியவில்லை இதுகுறித்து பீளமேடு போலீசில் டாக்டர் கவுதம் ராஜ் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.