மாணவன் பலாத்காரம்:போக்ஸோவில் கல்லூரி மாணவி கைது..!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் வருடம் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் தங்களுடைய மகனை மீட்டுக் கொடுக்கும்படி ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தனர். அதன் பேரில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியில் மாணவன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று அதிகாரிகள் மாணவன் மற்றும் அவரோடு இளம் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்து வருவதை கண்டு பிடித்தனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்ததும் பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு தனியே வாழலாம் என்று முடிவு செய்து வீட்டை விட்டு வெளிஏறியதும் தெரிய வந்தது. மேலும் அந்த மாணவனுக்கு 18 வயது ஆக இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் சிறுவனை திருமணம் செய்த குற்றத்திற்காக மாணவி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.