இதை அவர் பேசவில்லையாம்… மிமிக்கிரியாம்… சரி அதை விடுங்க .. லீக் ஆன ஆடியோவில் இதை நோட் பண்ணீங்களா? திமுக பக்கம் சாயும் முக்கிய புள்ளி… ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்… இனி நடக்க போறத பாருங்க…

சென்னை: நேற்று அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

இதில் அவர் குறிப்பிட்டதாக வெளியான சில விஷயங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்ததாக பொன்னையன் பேசிய ஆடியோ நேற்று இணையம் முழுக்க வைரலானது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் பேசியதாக கூறப்படும் இந்த ஆடியோ நேற்று வெளியானது.

ஆனால் இதை தான் பேசவில்லை, மிமிக்கிரி செய்துள்ளனர் என்று பொன்னையன் மறுத்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, தங்கமணிக்கு எதிராகவும் பொன்னையன் பேசுவதாகவும் ஆடியோவில் பதிவாகி உள்ளன.

பொன்னையன் பேசுவதாக வெளியான இந்த ஆடியோவில், தொண்டர்கள் எல்லாரும் இரட்டை இலை பின்னாடிதான் இருக்கிறார்கள். ஆனால் தலைவர்கள் பணத்திற்கு பின்னாடி இருக்கிறார்கள். தங்கமணியும் இப்போது மு. க ஸ்டாலின் பின்னாடி செல்ல ஆரம்பித்து இருக்கிறார். தங்கமணி தன்னை காப்பாற்றிக்கொள்ள ஸ்டாலின் பக்கம் செல்ல தொடங்கிவிட்டார். கேபி முனுசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திக்கொண்டார்.

இவர்கள் கொள்ளையடித்துவிட்டனர். இப்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள இவர்கள் ஆளும் கட்சியை நம்பி இருக்கிறார்கள். ஸ்டாலின் தயவு வேண்டும் என்பதால் திமுகவை இவர்கள் திட்டுவது இல்லை. அண்ணாமலை தயவு வேண்டும் என்பதால் அவரை பற்றியும் பேசுவதும் இல்லை. எடப்பாடி மட்டும்தான் ஸ்டாலினை கொஞ்சம் திட்டுகிறார். மற்ற யாரும் ஆளும் தரப்பை விமர்சனம் செய்வது இல்லை.

மாவட்ட செயலாளர்களிடமே 100- 200 கோடி உள்ளது. அதனால்தான் எல்லோரும் எடப்பாடி பின்னால் இருக்கிறார்கள். அப்போதுதான் சம்பாதித்த பணத்தை காப்பாற்ற முடியும். எடப்பாடி முதுகில் குத்திவிட்டனர். எடப்பாடிக்கு வேறு வழியே இல்லை. அவர் எம்எல்ஏக்களை கொள்ளையடிக்க விட்டு இப்போது மாட்டிக்கொண்டார். பதவியை காப்பாற்றிக்கொண்டால் போதும் என எடப்பாடி பழனிசாமி முட்டாள்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

யாரும் கட்சிக்கு விஸ்வாசமாக இல்லை. சிவி சண்முகத்திடம் 19 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். கொங்கு மண்டபத்தில் கூட எடப்பாடி கையில் எம்எல்ஏக்கள் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை.9 எம்எல்ஏ க்களின் ஆதரவு மட்டுமே அவரிடம் உள்ளது, இதனால் எடப்பாடி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை. வேலுமணி, தங்கமணி போன்றார்தான் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள்.

கேபி முனுசாமி கூட நாளை ஒற்றை தலைமைக்கு வரலாம், அதற்கான முயற்சியும் நடக்கிறது என்று பொன்னையன் பேசுவதாக கூறப்படும் ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோவையோ பொன்னையன் பேசவில்லை என்று மறுத்து தெரிவித்து இருக்கும் நிலையில்தான் அவர் சொன்ன விஷயம் ஒன்று தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி தங்கமணி திமுக பக்கம் ஆதரவாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

தங்கமணி முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆடியோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. தங்கமணி திமுக பக்கம் செல்ல போகிறாரா? அதிமுகவில் மோதல் நிலவும் நிலையில் திமுக பக்கம் தாவுகிறாரா என்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதிமுகவில் முக்கிய தலைவராக இருக்கும் தங்கமணி திமுக பக்கம் அவ்வளவு எளிதில் சென்றுவிட வாய்ப்பே இல்லை.. அவருக்கு அதற்கான அவசியம் இல்லை, அதிமுகவிலேயே அவர் பெரிய தலைவராக இருக்கிறார் என்றுதான் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.