இப்படி ஒரு ஸ்மார்ட் வாட்ச் பார்த்திருக்கிங்களா..? வேற லெவல் போங்க..!

ந்தியாவில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விட அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

காரணம் என்னவென்றால் தரமான அம்சங்கள், தனித்துவமான வடிவமைப்பு மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது அமேஸ்ஃபிட் நிறுவனம்.

இந்நிலையில் அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி (Amazfit GTR mini) எனும் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அமேஸ்ஃபிட் நிறுவனம். எவ்வளவு செலவானாலும் பரவல்ல ஒரு நல்ல ஸ்மார்ட்வாட்ச் வாங்கனும் என்று நினைக்கும் பயனர்கள் இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்குவது நல்லது. அதாவது தனித்துவமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. இப்போது இதன் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.28-இன்ச் (416×416 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் எச்டி ரெசல்யூஷன், வளைந்த கிளாஸ் பாதுகாப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக காம்பேக்ட் டிசைன் மற்றும் வட்ட வடிவம் கொண்டிருக்கிறது இந்த அட்டகாசமான அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் மாடல்.

அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வலதுபுறம் இருக்கும் வட்ட வடிவ டயல் கொண்டு மெனு மற்றும் இதர ஆப்ஷன்களை இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பா பீரிமியம் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புளூடூத் 5.2 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் மாடல். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் துல்லியமான GPS கண்காணிப்பு திறன் கொண்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை நம்பி வாங்கலாம். பின்பு இந்த சாதனத்தின் பேட்டரி பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதாவது இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் ஆனது 280 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் பேட்டரி சேவிங் மோடில் அதிகபட்சம் 20 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு வழக்கமான பயன்பாடுகளின் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 120-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை வழங்குகிறது. இதுதவிர ஹார்ட் ரேட் மாணிட்டரிங், ஸ்டிரெஸ் லெவல் மேப்பிங், SpO2, 5 satellite positioning systems, BioTracker PPG ஆப்டிகல் சென்சார் உள்ளிட்ட வியக்க வைக்கும் அம்சங்களுடன் இந்த அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

குறிப்பாக 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல். பின்பு கேமரா கண்ட்ரோல் மற்றும் மியூசிக் கண்ட்ரோல் வசதியைக் கொண்டுள்ளது அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச். அதேபோல் 80-க்கும் அதிகமான வாட்ச் பேஸ் (watch face) தீம்கள் இதில் இருக்கிறது.

இந்தியாவில் அமேஸ்ஃபிட் ஜிடிஆர் மினி ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.10.999-ஆக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை அமேசான் தளத்தில் வாங்க முடியும். பின்பு மிட்நைட் பிளாக், மிஸ்டி பின்க் மற்றும் புளூ ஆகிய நிறங்களில் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.