தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் : தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை.!!

நேற்று தமிழக ஆளுநர் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்த போது அரசியல் கட்சி தொண்டர்கள் அவரது கார் மீது கல் மற்றும் கொடி கம்பங்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின் போது தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பேச வாய்ப்பு இருப்பதாகவும் நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது

தமிழக ஆளுநர் மீது எந்தவிதமான தாக்குதலையும் நடத்தவில்லை என காவல்துறையினர் கூறிய நிலையில் தமிழக ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என எதிர்க் கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது