உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்…பிரதமர் மோடி பெருமிதம்.!!

Close-up of raw milk being poured into container with cows in background

புதுடில்லி: இந்தியா முதலிடம்… ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்புக்கு பால் உற்பத்தி செய்து, உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

பால் உற்பத்தி மதிப்பானது கோதுமை, அரிசி உற்பத்தி மதிப்பைவிட அதிகமாக உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள தியோதா் என்ற இடத்தில் பால் பொருள்கள் வளாகத்தையும் உருளைக் கிழங்கு பதப்படுத்தும் ஆலையையும் பிரதமா் மோடி திறந்துவைத்தாா்.

பனாஸ் சமூக வானொலியின் செயல்பாட்டையும் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். 100 டன் உற்பத்தித் திறன் கொண்ட 4 இயற்கை எரிவாயு ஆலைகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா். பின்னர் அவா் பேசியதாவது: