மணலியில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு.!!

சென்னை : மணலியில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடிகால்கள் அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

சென்னை, கொருக்குப்பேட்டையில் மழைநீர் வடிகால், கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. கண்ணண் சாலை, தியாகப்பா தெரு, ஏகாம்பரம் தெருவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். கொருக்குப்பேட்டை ரயில் நிலையம், கார்கில்நகர், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். முதற்கட்டமாக சென்னை வடிவுடையம்மன் கோயில் தெரு அருகே கொசஸ்தலை ஆறு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். கடந்த வடகிழக்கு பெருமழையில் சென்னையில் பல்வேறு பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டனர்.

அதில் ஒரு பகுதி மணலி ஆகும். மணியில் மழைநீர் பெரும் அளவில் தேங்கி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தற்போது அடுத்த வடகிழக்கு பருவமழைக்குள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு மழை நீர் தேங்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன் வகயைில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள அனைத்து முக்கிய வார்டுகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை எழும்பூர், குளத்தூர் போன்ற 4 இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். வரும் 2023-க்கு இந்த பணிகளை முடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வில் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மேயர் பரியா மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.