முதல்வர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி

முதல்வர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி

கோவை ஈச்சனாரி பகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு நடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகள் ரூ.267.83 கோடி மதிப்பீட்டில் 226 பணிகளை துவக்கி வைத்தார். ரூ.644.84 கோடி மதிப்பீட்டில் 761 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.587.68 கோடி மதிப்பீட்டில் 106641 பயணாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை (விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள், அரசு காப்பீடு திட்டம், தையல் இயந்திரம்) வழங்கினார்.

முன்னதாக கோவையில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், மேற்கொள்ளப்பட்ட அரசு திட்டங்களின் காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மேயர் கல்பனா ஆனந்த்குமார் உட்பட கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.