முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரை தவிர்த்து இதர 37 மாவட்டங்களில் இன்று நடைமுறைக்கு வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி, மாணவர்களுக்கு ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மதுரை தவிர்த்து இதர 37 மாவட்டங்களில் இன்று நடைமுறைக்கு வருகிறது. 37 மாவட்டங்களிலும் மாவட்ட அமைச்சர்கள், ஆட்சியர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திட்டத்தை துவக்கி வைக்கின்றனர்.
Leave a Reply