கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு “ஸ்கூட்”விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 2 பேர் நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்பட்டு முழுமையாக சோதனை நடத்தினார்கள். இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேசவன் ( வயது 31) என்பவர் தனது உள்ளாடைக்குள் தங்கச் சங்கிலிகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதை கண்டறிந்த அதிகாரிகள் 835 கிராம் தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 1 கோடியே 50 லட்சம் ஆகும். இதை யடுத்து கேசவன் கைது செய்யப்பட்டார். இதேபோல தஞ்சாவூர் மாவட்டம் வேலம்பட்டியை சேர்ந்த வீரப்பன் ரங்கசாமி ( வயது 38) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்போது அவரது உள்ளாடைக்குள் 736 கிராம் எடையுள்ள நகைகள் மற்றும் தங்க கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதிகாரிகள் அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர்.இதன் மதிப்பு ரூ 2 கோடியே 50 லட்சம் இருக்கும். அவர்கள் தங்கத்தை கடத்தி யாருக்கு விற்பனை செய்ய வந்தனர் ?என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கை தான கேசவன், வீரப்பன் ரங்கசாமி ஆகியோர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் இதில் கேசவன் சென்னை புழல் சிறையிலும், வீரப்பன் ரங்கசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்
சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ 4 கோடி தங்கம் கடத்தல்








